மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நான் பாட்டியாக விரும்புகிறேன், மீண்டும் தாயகமாட்டேன்" - 51 வயதில் டேட்டிங் ஆசையுடன் நடிகை.!
அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகை சோபியா வெர்கரா (51). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜோ மங்காலெனல் என்பவரை மணந்து சமீபத்தில் அவரை பிரிந்தார். இவருக்கு கடந்த 1991ம் ஆண்டு ஜோ என்பவருடன் திருமணம் நடைபெற்று முடிந்து குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்நிலையில், இரண்டாவது திருமண வாழ்க்கையும் விவகாரத்தில் முடிந்தது. இவர் 'Watch What Happens Live With' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிருபரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது நிருபர் ஒருவரை குறிப்பிட்டு அவருடன் டேட்டிங் செல்வீர்களா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நடிகை (Sofía Vergara), நான் எனது மகனை விட வயது குறைந்தவருடன் டேட்டிங் செல்லமாட்டேன். எனது மகனுக்கு 32 வயது ஆகிறது. எனது வயதுடன் நெருங்கிய வயது உள்ளவருடன் நான் டேட்டிங் செல்லலாம்.
ஏனெனில் இளவயதுள்ளவர்கள் டேட்டிங்-க்கு பின்னர் குழந்தைக்கு ஆசைப்படுவார்கள். நான் அதற்கு தயாராக இல்லை. எனக்கு மெனோபாஸ் நெருங்கிவிட்டது. நல்ல நண்பராக என்னுடன் ஒருவர் பயணிக்க விருப்பினால், அதற்கு வாய்ப்புகளை வழங்குவேன். எனது மகனின் குழந்தையை காணவே நான் ஆசைப்படுகிறேன், நான் மீண்டும் தாயாக விருப்பவில்லை" என கூறினார்.