மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் சார்லியின் உண்மையான பெயர் என்ன தெரியுமா? சார்லி என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னை நகைச்சுவை நடிகராகவும், குணசித்ர நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் சார்லி. வெற்றிகொடிக்கட்டு, விஜய் நடித்த காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக போன்ற படங்களில் இவரது நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும், விஜய், அஜித், முரளி, விக்ரம் என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்ளின் படங்களில் நடித்துள்ளார் சார்லி, ப்ரண்ட்ஸ் படத்தில் நடிகர் வடிவேலுடன் இவர் இணைத்து செய்திருக்கும் காமெடி காட்சிகள் இன்றுவரை பிரபலம் என்றே கூறலாம்.
புதுமுக நடிகர்களின் வருகையால் சரியான வாய்ப்புகள் இல்லாமல் தவித்துவரும் இவர் தமிழ் படங்களில் நகைச்சுவை என்ற தலைப்பில் சமீபத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவருக்கு திரை உலகினர் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சார்லி என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இவரது பெயர் பிரபலம். உண்மையில் இவரது பெயர் சார்லி இல்லை. இவரது உண்மையான பெயர் மனோகர்.
பிரபல ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் மீதான பற்றால் தனது பெயரை சார்லி என மாற்றிக்கொண்டார் மனோகர்.