மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அது என்ன முரட்டு சிங்கிள்?? காமெடி புயல் ராமர் கொடுத்த விளக்கம்!!
தற்போது "டிக் டாக்" எனும் செயலியில் அதிகமாக பேசப்பட்டு வரும் வார்த்தை "முரட்டு சிங்கிள்" இந்த வார்த்தையை டிக் டாக் செயலியில் அதிகப்படியானோர் முரட்டு சிங்கிள் மாரிமுத்து என பதிவிட்டு வெளியிடப்படும் வீடியோ அதிகபடியான லைக்குகளையும், கமெண்டுகளையும் பெற்று வருகிறது.
தற்போது முரட்டு சிங்கிள் எனும் வார்த்தைக்கு என்ன அர்த்தம் எனத் தெரியாமல் பலரும் யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில், விஜய் டிவி புகழ் ராமர் அவர்களிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர் அனைவரையும் வியப்பூட்டும் வகையில் நகைச்சுவையாக பதிலை கூறியிருக்கிறார்.
பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், தாடி பாலாஜி அவர்கள் வெறும் சிங்கிள் கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனால் அது என்ன முரட்டு சிங்கிள்? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராமர், பொண்ணுங்களே வேணாம் என்பதற்காக, ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆண்கள் பயிலும் பள்ளியிலே படித்துவிட்டு, அதற்குப் பிறகு கல்லூரி படிப்பிற்கு சென்ற பிறகும் பெண்கள் அதிகம் எடுக்காத பாட பிரிவான மெக்கானிக்கல் கோர்ஸ் எடுத்து படித்து முடித்து வேலைக்கு சென்று,
அங்கும் பெண்கள் இருப்பார்களோ என நினைத்து, வேலைக்கு போகாமல் வீட்டிலேயே அமர்ந்து தண்டசோறு சாப்பிட்டு கொண்டிருக்கின்றானே அவன்தான் முரட்டு சிங்கிள், மேலும் நானும் மெக்கானிக் கோர்ஸ் தான் எடுத்துள்ளேன் என கூறி, மிகவும் காமெடியாக பேசி முரட்டு சிங்கிள் என்ற வார்த்தைக்கு காமெடியான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.