மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சதீஷ் நடிப்பில் தமிழில் உருவாகிறது கான்ஜுரிங்" வெளியான செய்தி.!
தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் சதீஷ். இவர் சிவா நடித்த "தமிழ் படம்" என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் அறிமுகமானார். சிறிய கேரக்டர்களில் நடித்து வந்த சதீஷ், சிவ கார்த்திகேயன் நடிப்பில் வெளியான "எதிர் நீச்சல்" படத்தில் முக்கிய காமெடி நடிகரானார்.
தொடர்ந்து சதீஷ் மான் கராத்தே, தாண்டவம், சிகரம் தொடு, நையாண்டி உள்ளிட்ட தமிழ் படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தொடர்ந்து விஜயுடன் கத்தி, ரஜினியுடன் அண்ணாத்தே படங்களிலும் காமெடி ரோலில் கலக்கியுள்ளார்.
தற்போது ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் "கான்ஜுரிங் கண்ணப்பன்" என்ற படத்தில் சதீஷ் கதாநாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கும் படத்தில், ரெஜினா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.
இந்தப்படம் ஒரு ஹாரர் காமெடி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. குழந்தைகளையும் பார்த்து ரசிக்கும் வகையில், இந்தப்படத்தை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் அனைத்து வயதினரையும் கவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.