"உருவகேலி செய்யாமல், பிறர் மனதை நோகடிக்காமல் நகைச்சுவை செய்ய வேண்டும்" காமெடி நடிகர் சதீஷ்!



Comedy actor sathish talking about bodyshaming

2006ம் ஆண்டு "ஜெர்ரி" என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் சதீஷ். தொடர்ந்து ஒன்பது ரூபாய் நோட்டு, தமிழ் படம், கொலகொலயா முந்திரிக்கா, மதராசப்பட்டினம், வாகை சூடவா, மெரினா, மாலைப் பொழுதின் மயக்கத்திலே, எதிர்நீச்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Sathish

மேலும் இவர் கத்தி மற்றும் தங்கமகன் படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான எடிசன் விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டார். தற்போது கதாநாயகனாக நடித்து வரும் இவர், 2021ம் ஆண்டு வெளியான "நாய் சேகர்" படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

ஆரம்ப காலங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் நடித்து, பின்னர் நகைச்சுவை நடிகராக நடித்து, தற்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்து வரும் சதீஷ் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது இவர் "காஞ்ஜூரிங் கண்ணப்பன்" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Sathish

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சதீஷ், "நகைச்சுவை என்ற பெயரில் உருவகேலி செய்வதை ரசிகர்கள் இப்போதெல்லாம் விரும்புவதில்லை. சொன்னதையே சொல்லாமல் புதிதாக நிறைய பன்ச் லைன்களை சொல்லவேண்டும். யாரையும் நோகடிக்காமல் காமெடி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.