மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வில்லன் நடிகர் கலாபவன் மணி மரணத்தில் திடீர் திருப்பம்.. தானாகவே மரணத்தைத் தேடிக் கொண்டாரா.?
தமிழ் சினிமாவில் ஆரம்ப நிலையில் இருந்து வில்லன் நடிகர்களாக பலர் வந்துள்ளனர். வில்லன் நடிகர்களாகவே இருந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்கள் ஒரு சிலரே. அந்த வரிசையில் தற்போது வரை மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் 2016 ஆம் ஆண்டு உயிரிழந்த நடிகர் கலாபவன் மணி.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழித்திரைப்படங்களில் வில்லன் நடிகராகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து உள்ளார். இறுதியாக கமலஹாசன் நடிப்பில் வெளியான 'பாபநாசம்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இது போன்ற நிலையில், 2016 ஆம் ஆண்டு கலாபவன் மணி உயிரிழந்து விட்டார் எனும் செய்தி மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. கல்லீரலில் ஏற்பட்ட நோய் காரணமாக இவர் உயிரிழந்து விட்டார் என்று கூறப்பட்டு வந்தது.
இதனை அடுத்து தற்போது வெளிவந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன. அதாவது ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு பாட்டில் மதுபானங்களை தொடர்ந்து குடித்து வந்திருக்கிறார். கல்லீரல் பிரச்சனை என்று தெரிந்தும் கூட மதுபானம் குடிப்பதை நிறுத்தவில்லை. அவர் உயிரிழந்த நாளன்று கூட மதுபானத்தை குடித்து இருக்கிறார். தானாகவே மரணத்தை தேடிக்கொண்டார் என்று விசாரணையில் கூறியுள்ளனர். இவருக்கு என்ன பிரச்சனை என்று காவல்துறை தரப்பில் மேலும் விசாரித்து வருகின்றனர்.