மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒப்பன் ஹெய்மர் திரைப்படத்தில் பகவத் கீதை பற்றிய சர்ச்சை காட்சி... தணிக்கை குழுவிற்கு ரசிகர்கள் கடும் கண்டனம்.!
ஹாலிவுட் பிரபல இயக்குனரான கிரிஸ்டோபர் நூலன் இயக்கத்தில் ஒப்பன் ஹெய்மர் என்ற திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இரண்டாம் உலகப்போரில் அணு ஆயுத தாக்குதலுக்கு மூல காரணமாக இருந்த விஞ்ஞானி ஒப்பன் ஹெய்மர் என்பவரது வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் சிலியன் மர்ஃபி, ராபர்ட் டவுனி, ஃப்ளோரன்ஸ் பக் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மொமென்டோ இன்செப்ஷன் மற்றும் தென்னட் போன்ற திரைப்படங்களை இயக்கிய கிறிஸ்டோபர் நோலன் இந்த திரைப்படத்தையும் இயக்கி இருப்பதால் இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இன்று வெளியாகிய இந்த திரைப்படம் ரசிகர்களிடமும் சினிமா விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இரண்டாம் உலகப்போரை மையமாக வைத்து உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அணுகுண்டு தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த விஞ்ஞானியை பற்றிய கதை என்பதால் மக்கள் ஆவலுடன் இந்த திரைப்படத்தை கண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் புதிய சர்ச்சை ஒன்று கிளம்பி இருக்கிறது. அதாவது இந்த திரைப்படத்தின் படுக்கையறை காட்சி ஒன்றின் போது படத்தின் நாயகன் மர்பி பகவத் கீதையின் வசனம் ஒன்றை படிப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருக்கிறது. இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தணிக்கை குழு எவ்வாறு இந்த காட்சியை அனுமதித்தது என பல கண்டனங்கள் எழுந்துள்ளன.