மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குக் வித் கோமாளியில் "நான் வரமாட்டேன்" என "நானே வருவேன்" தனுஷ் கெட்டப்பில் அறிவித்த மணிமேகலை!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களில் ரசிகர்களால் முக்கியமாக கொண்டாடப்படுபவர் மணிமேகலை.
பிரபல தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பின்னர் விஜய் டிவிக்கு நிகழ்ச்சி தொகுப்பாளராக வந்தவர் மணிமேகலை. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் விதவிதமான கோமாளி வேடங்களில் வந்து ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றார். இவரது வருகைக்காகவே இந்த நிகழ்ச்சியை ஏராளமான ரசிகர்கள் கண்டு வந்தனர்.
இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக இருப்பதோடு மட்டுமல்லாமல் யூட்யூப் சேனல் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். தன்னுடைய பயணங்கள் மற்றும் நிகழ்வுகளை இந்த சேனலின் மூலம் ரசிகர்களுக்கு காணொளிகளை பகிர்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் "இதுதான் தான் பங்கேற்க போகும் கடைசி எபிசோட்" என தெரிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். மேலும் "இது ஒரு கடினமான முடிவு தான்" ஆனால் எடுக்க வேண்டி இருக்கிறது என வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார் அவர்.
இதற்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் இவருக்கும் ஏற்பட்ட கருத்து மோதலே இவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகியதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நானே வருவேன் தனுஷ் கெட்டப்பில் இருக்கும் ஃபோட்டோவை பதிவிட்டுள்ள இவர் "நான் வரமாட்டேன் என்பதை நானே வருவேன் கெட்டபின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டு இருக்கிறார்.