மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்கிறாரா பிரபல இசையமைப்பாளரின் மாஜி மனைவி.! தீயாய் பரவும் தகவல்!!
தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி. இமான். இவரது மனைவி மோனிகா ரிச்சர்ட். அந்த தம்பதியினருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகி 13 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டி.இமான் மோனிகாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.
மேலும் சில காலங்களுக்கு முன்பு எமிலி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து மோனிகா சமூக வலைத்தளத்தில் தனது முன்னாள் கணவரின் ஒவ்வொரு பதிவிற்கு பதிலடி கொடுத்து வருகிறார். இந்நிலையில் மோனிகா ரிச்சர்ட் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் விரைவில் 6வது சீசன் தொடங்கப்பட உள்ளதாகவும், அதற்காக போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிக்பாஸ் 6வது சீசனில் டி இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.