மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முன்னாள் மனைவி மீது பொய்யான வழக்கு.! சர்ச்சையில் சிக்கிய டி.இமான்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி. இமான். இவரது மனைவி மோனிகா ரிச்சர்ட். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். திருமணமாகி 13 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டி.இமான் மோனிகாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.
மேலும் அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு எமிலி என்பவருடன் இரண்டாவது திருமணமும் நடைபெற்றுள்ளது. இமானின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் தற்போது இமான், முன்னாள் மனைவி மோனிகாவின் மீது பொய் புகார் கூறியதாக மோனிகா தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதாவது இமான், முன்னாள் மனைவி மோனிகா தனது குழந்தைகளை வெளிநாடு அனுப்புவதற்காக பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதாக பொய் கூறி புது பாஸ்போர்ட் வாங்கியுள்ளதாக புகார் அளித்துள்ளாராம். ஆனால் அதனை மறுத்து மோனிகா தான் குழந்தைகளின் பாஸ்போர்டை கேட்டபோது இமான் தொலைந்துவிட்டதாக கூறி கொடுக்க மறுத்ததாகவும், அதனாலேயே தான் புது பாஸ்போர்ட்க்கு பதிவு செய்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து குழந்தை கஸ்டடி உரிமையை வைத்திருக்கும் மோனிகாவிற்கே குழந்தைகளின் பாஸ்போர்ட்டை வைத்திருக்கும் உரிமையுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.