மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரே நிற உடையில் திருமணம் செய்துகொள்ள இத்தாலிக்கு பறந்த பாலிவுட் காதல் ஜோடிகள்! ரசிகர்கள் உற்சாகம்
டென்மார்க்கில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தவர் தீபிகா படுகோன். 2006 ஆம் ஆண்டில் முதன் முறையாக "ஐஸ்வர்யா" என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தார். 2007 இல் ஃபாரா கானின் "ஓம் ஷாந்தி ஓம்" இந்தி படத்தோடு இந்தியா முழுவதும் அறிமுகம் பெற்றார்.
தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார் தீபிகா படுகோன். மேலும் பல விளம்பரப் படங்களிலும் நடத்து புகழ் பெற்றவர் தீபிகா. பாலிவுட்டில் தன்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் அவர்.
32 வயதான தீபிகா படுகோனும் பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் இவர்களது திருமணம் வரும் நவம்பர் 14 மற்றும் 15 தேதிகளில் இத்தாலியில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இரு வீட்டாரும் இன்று துபாய் வழியாக இத்தாலி செல்கின்றனர்.
இவர்கள் ஜோடியாக வருவதை அறிந்த ரசிகர்கள் விமான நிலையத்தில் கூடிவிட்டனர். இவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக வெள்ளை நிறத்தில் ஆடைகளை உடுத்தி இருந்ததை பார்த்து இவர்களின் காதல் எந்த அளவிற்கு ஆழமானது என்று புகழ்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.