மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில் அப்டேட்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
தனுஷ் இயக்கத்தில் உருவாக உள்ள மூன்றாவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் தனுஷ். தற்போது இவர் தனது 50வது திரைப்படத்தை இயக்கி, நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் மூன்றாவதாக ஒரு திரைப்படம் உருவாகியுள்ளது. என்ன திரைப்படத்தை அவரே தயாரிக்க உள்ளார். இந்த திரைப்படம் குறித்த அப்டேட் வரும் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த படத்தில் தனுஷின் சகோதரி மகன் ஹீரோவாகவும், அனிதா சுரேந்திரன் ஹீரோயின் ஆகவும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் தனுஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.