மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking : தனுஷின் தந்தையாக அடையாளப்படுத்திய நபர் மரணம்.!
நான் நடிகர் தனுஷின் தந்தை என்று கூறி வந்த நபர் கதிரேசன் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் ஆவார். இயக்குனர் மற்றும் நடிகரான செல்வராகவனின் தம்பியான தனுஷ் அவரது திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தான் சினிமாவில் தனது அடியை எடுத்து வைத்தார்.
அதன் பின் தனது திறமையால் படிப்படியாக அவர் உயர்ந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்ற நபர் தனுஷ் தனது மகள் என உரிமை கொண்டாடி தனது மனைவி மீனாட்சியுடன் சேர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தினார். கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தம்பதிகள் தனுஷ் எனது மகன் என்னிடம் கொடுத்து விடுங்கள் என்று போராடி வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக கதிரேசனுக்கு உடல் நலமானது குன்றி பாதித்து வந்துள்ளது. அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று கதிரேசன் உயிரிழந்துள்ளார்.