மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுத்த படத்தை இயக்க தயாரான தனுஷ்.. ஹீரோ யார் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இதனிடையே தனுஷ் தனது 50வது திரைப்படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.
மேலும் இந்த படத்தில் தனுஷ் உடன் எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்திப் கிஷன், செல்வராகவன், அமலாபால் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது எந்த படத்தில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.