மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது இந்த முன்னணி நடிகரா.! வெளிவந்த சுவாரசிய தகவல்!!
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று காலத்தால் அழியாத காதல் காவியமாக புகழப்படும் திரைப்படங்களில் ஒன்று "காதல்". 2004 ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் பரத் மற்றும் ஹீரோயினாக நடிகை சந்தியா ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப்படத்தில் அவர்கள் தங்களது நடிப்பு திறமையை பெருமளவில் வெளிக்காட்டி இருப்பார்கள்.
மேலும், அவர்களது நடிப்பு பலராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது. காதல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தை இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ளார். படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது.
இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் முதன்முதலாக தயாரித்துள்ளார். இவ்வாறு மாபெரும் பிளாக்பஸ்டர் கொடுத்த காதல் திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிகர் தனுஷை நடிக்க வைக்கவே இயக்குனர் பாலாஜி சக்திவேல் எண்ணியதாகவும், ஆனால் அப்பொழுது இருந்த சில சூழ்நிலை காரணமாக இப்படத்தில் தனுஷால் நடிக்க முடியாமல் போனதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.