மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது! நடிகர் சிவகார்த்திகேயன் இந்த நடிகரை இந்தியாவின் சிறந்த நடிகர் வரிசையில் முக்கியமானவர் என கூறியுள்ளாரா!
நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையான விஜய் டிவியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர். அதன் பிறகு நடிகர் தனுஷுடன் இணைந்து 3 படத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் காலடிப்பதித்தார். அதன் பின் மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
மேலும் தனது கடினமான உழைப்பாலும், நகைச்சுவையாலும் குழந்தை ரசிகர்களை அதிகம் சம்பாதித்தவர். அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமின்றி இன்று இவர் ஒரு முன்னணி நடிகராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் இன்னும் சில தினங்களில் நடிகர் சிவாவின் ஹுரோ படம் திரைக்கு வரவுள்ளது. இப்படம் குறித்து பேட்டி ஒன்றில் சிவா பேசிய போது நடிகர் தனுஷை பற்றியும் பேசியுள்ளார்.
அதில் முதலில் ஹுரோ படத்தை பற்றி ஒரு சிலவற்றை கூறிய பிறகு நடிகர் தனுஷ் இந்தியாவின் சிறந்த நடிகர் வரிசையில் முக்கியமானவர் இவர் தான் என புகழ்ந்து கூறியுள்ளார்.