மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"யாரை கொல்ல போறீங்க?".. மங்காத்தா மியுசிக்கில், துப்பாக்கியும் கையுமாய் தர்ஷாகுப்தா..!! தீயாய் பரவும் வீடியோ..!!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று அனைவரது மனதையும் கவர்ந்தவர் தர்ஷா குப்தா.
இவர் நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான "முள்ளும் மலரும்" என்ற தொடரின் மூலம் அறிமுகமான இவர், அதனை தொடர்ந்து அவளும் நானும், சேந்தூரப்பூவே போன்றவற்றில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் நடித்தார்.
இதன் பின் பல படங்களில் ஒப்பந்தமாகி இருக்கும் தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். துப்பாக்கியுடன் நடந்து செல்வது போன்ற வீடியோவை வெளியிட்டிருந்த நிலையில், இதனை கண்ட ரசிகர்கள் யாரை கொலை செய்யப் போகிறீர்கள்? என்று கலாய்த்து வருகின்றனர்.