மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல இளம் நடிகருடன் இப்படியொரு செல்பியா? தர்ஷனின் காதலி செய்த காரியத்தை பார்த்தீர்களா!!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் தர்ஷன். இலங்கையைச் சேர்ந்த விளம்பர மாடலான இவர் வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்தித்தபோது வெற்றிக்காக போராடி வந்தார். அதனைத் தொடர்ந்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதன் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.
மேலும் பிக்பாஸ் இறுதி கட்டத்திற்கு சென்று இவர்தான் வெற்றிபெறுவார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் அவர் குறைந்த வாக்குகளைப்பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதனை தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது.
இந்நிலையில் தர்ஷன் நடிகை சனம் ஷெட்டியை காதலிப்பதாக தகவல் பரவியது. மேலும் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படமும் வைரலானது. மேலும் அவர் தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது அவருக்கு ஆதரவாக சமூக வலைதளபக்கத்தில் கருத்துக்களை தெரிவித்து வந்தார். மேலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும் இருவரும் சந்தித்துள்ளனர். இந்நிலையில் சனம் ஷெட்டி சமீபத்தில் பிரபல நடிகர் சிம்புவை சந்தித்துள்ளார்,. மேலும் இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட சனம் ஷெட்டி நான் அவருடைய தீவிர ரசிகை என குறிப்பிட்டுள்ளார்.