சினிமாவில் களமிறங்குகிறாரா தல தோனி? அதுவும் இந்த மாதிரியான கதையில்! வெளியான புதிய தகவல்!



Dhoni produce science fiction webseries

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பாவானாக திகழ்ந்த முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.  இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் தோனி  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமையேற்று ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். முதல் போட்டியை அசத்தலாக வென்ற நிலையில், அடுத்த இரு போட்டிகளிலும்  வெற்றியை இழந்துள்ளனர். 

dhoni

மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் மட்டுமின்றி சினிமா, ஆர்மி உள்ளிட்ட பலவற்றிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.  மேலும் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தோனி தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் புதிய வெப்சீரீஸ் ஒன்றை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த வெப்சீரிஸ் புராணம் மற்றும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் கலந்து உருவாக்க உள்ளதாகவும், மேலும் ஒரு நாவலை மையமாக கொண்டு படமாக்கபட உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.  இந்நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.