"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
"தலைவரை இயக்கியது கனவு போல் இருக்கிறது"; பேட்ட படப்பிடிப்பு குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘பேட்ட’. தமிழ்நாடு, உத்தர பிரதேசம் உட்பட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம் சசிகுமார், பாபி சிம்ஹா, த்ரிஷா, சிம்ரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நான்கு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள், 15 நாட்களுக்கு முன்னதாகவே முடிவு பெற்றுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ரஜினிகாந்த், ’பேட்ட’ படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
Thanks thalaivaaaa 🙏 Best days of my life.... Dream come true.... #Petta shoot wrapped... Thanks to the whole team for making this happen.... Still can't believe that I directed a Thalaivar film... All feels like a dream... https://t.co/cFR93QbEMq
— karthik subbaraj (@karthiksubbaraj) October 19, 2018
ரஜினிக்கு நன்றி தெரிவித்துள்ள அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் "நன்றி தலைவா.. இந்த நாட்கள் எனது வாழ்வின் மிகச் சிறந்த நாட்கள். என்னுடைய கனவு நினைவாகி இருக்கிறது. இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் இயக்கியது தலைவரை தானா என என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. எல்லாம் ஒரு கனவு போல இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.