மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சாப்பிடும் போட்டு, தட்டையும் கழுவித்தான் முன்னேறினேன்" - மனம்திறந்த ஏ.ஆர் முருகதாஸ்..!
தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஏ.ஆர் முருகதாஸ், திரையுலக பயணத்தின் தொடக்கத்தில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டவர் ஆவார்.
தான் பொதுஇடங்களில் பேசும்போது, தனது வாழ்க்கையின் கஷ்டங்களை குறிப்பிடாமல் மேலோட்டமாக பேசும் முருகதாஸ், எப்போதாவது மனம் திறந்து சில தகவல்களை பகிர்ந்துகொள்வார்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக்கத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட ஏ.ஆர் முருகதாஸ், "நான் உதவியாளராக பணியாற்றியபோது, பலருக்கும் சாப்பாடு கொடுத்து அவர்களின் தட்டையும் கழுவி வைத்திருக்கிறேன்.
எவ்வுளவு கீழ் இருந்து முன்னேறி இருக்கிறேன் என்பதற்கு அதுவே சாட்சி. அதனை சொல்வதில் நான் பெருமைப்படுகிறேன்" என தெரிவித்தார்.