மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சர்க்கார் உண்மைலயே திருடப்பட்ட கதைதான்! கையும் களவுமாக பிடித்த இயக்குனர் பாக்யராஜ்!
நடிகர் விஜய் படம் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. தற்போது இதுபோன்ற சர்ச்சைகளுக்கு இயக்குனர் முருகதாஸும் இணைந்துவிட்டார். கத்தி திரைப்படத்தில் அந்த கதை என்னுடையது என்று முருகதாஸின் உதவி இயக்குனர் ஒருவர் புகார் தெரிவித்திருந்தார்.
தற்போது சர்க்கார் திரைப்படத்தின் கதை என்னுடைது என்றும், செங்கோல் என்ற பெயரில் தான் எழுதிய கதையை முருகதாஸ் அவர்கள் சர்க்கார் என்ற பெயரில் படமாகிவருவதாகவும் அவரது உதவி இயக்குனர் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
சர்கார் ரிலீஸுக்கு இன்னும் இருவாரங்களே மீதமுள்ள நிலையில், கதைத்திருட்டு பஞ்சாயத்தில் கலந்துகொண்ட இயக்குநர் பாக்கியராஜ், சர்க்கார் படத்தின் கதை திருடப்பட்ட கதைதான் என கூறியுள்ளது படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வருண் ராஜேந்திரனின் செங்கோல் கதை என்ன சொல்கிறதோ அதையே தான் முருகதாசின் கதையும் சொல்கிறது.
எழுத்தாளர் சங்க தலைவராக எனது கடமையை நான் செய்துளேன் என்றும் தனிப்பட்ட முறையில் பேசி தீத்துக்கொள்ளுங்கள் என்று இயக்குனர் முருகதாசிடம் கூறியதாகவும்
ஆனால் அவரோ ‘சிவாஜி சார்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவரது ஓட்டை வேறு ஒருவன் போட்டு விட்டான் என்கிற உண்மையை வைத்துக் கதையைப் பண்ணினேன்’என்கிறார் என்று கூறியுள்ளார்.
மேலும் இதுபற்றி அந்தப் பையனிடம் சொல்லி விட்டேன். இந்த அளவுக்குத்தான் சங்கம் உதவி செய்யமுடியும் என்பதையும் சொல்லி விட்டேன்’ என்கிறார் பாக்கியராஜ். இதற்குமேல் காலம்தான் பதில்சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் இயக்குனர் பாகியராஜ்.