மீண்டும் அந்தப் படத்தின் இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் அஜித் குமார்.? படம் ஹிட்டாகுமா.?



director-h-vinoths-next-project in ajith

இப்போதெல்லாம் முன்னணி கதாநாயகர்கள் ஒரு படத்தில் நடித்து, அந்த திரைப்படம் ஹிட் கொடுத்து விட்டால், அந்த திரைப்படத்தில் இயக்குனருக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், நடிகர் அஜித்குமாரை வைத்து, முதன் முதலில் வீரம் திரைப்படத்தை இயக்கியவர் சிறுத்தை சிவா அதன் பிறகு விவேகம், விசுவாசம் உள்ளிட்ட திரைப்படங்களையும் சிவா தான் இயக்கினார்.

cinemaஅதன் பிறகு அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தை இயக்கிய ஹச் வினோத்துக்கு, துணிவு, வலிமை உள்ளிட்ட 2 திரைப்படங்களை இயக்குவதற்கு வாய்ப்பு கொடுத்தார் அஜித் குமார். அந்த வகையில், ஹஜ் வினோத்திற்கு மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை அஜித் வழங்க திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் ஹச் வினோத் துணிவு திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குவதற்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். ஆனால் தற்போது கமலஹாசன் பிஸியாக இருப்பதால் தீரன் அதிகாரம் திரைப்படத்தின் 2-வது பாகத்திற்கான கதையை கிட்டத்தட்ட எழுதி முடித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

cinemaஇதனை தொடர்ந்து தான்,  நடிகர் அஜித்தை சந்தித்து ஒரு ஒன்லைன் சொல்லி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் சொன்ன அந்த ஒன்லைன் நடிகர் அஜித்துக்கு பிடித்து பிடித்து விட்டதாம். ஆகவே அந்த திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பையும் அஜித் வினோத்திடம் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது.