ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
இயக்குனர் ஹரியை கைவிட்ட சூர்யா.. பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கை கொடுத்த விஷால்.?
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் ஹரி. இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களை அளித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்திருக்கிறார். இவர் இயக்கிய படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து, பல வெற்றி திரைப்படங்களை அளித்து வருகிறார்
தமிழில் முதன் முதலில் 2002 ஆம் ஆண்டு வெளியான 'சாமி' திரைப்படத்தை இயக்கினார். முதல் படம் மிகப்பெரும் ஹிட்டானது. இப்படத்திற்கு பின்பு கோவில், ஆறு, ஐயா, தாமிரபரணி, வேல், சேவல், சிங்கம், பூஜை, சிங்கம் 2, சிங்கம் 3 போன்ற ஹிட் படங்களை அளித்துள்ளார்.
நடிகர் சூர்யாவிற்கு தொடர்ந்து சிங்கம் திரைப்படத்தின் மூலம் பெயர் பெற்று தந்தவர் ஹரி. இவர் சிங்கம் திரைபடத்திற்கு பின்பு எந்த திரைப்படங்களையும் இயக்காமல் இருந்தார். இந்நிலையில் மீண்டும் 9 வருடங்களுக்கு பிறகு விஷாலுடன் இணைந்து திரைப்படம் இயக்கியுள்ளார்.
விஷாலின் 34 ஆவது படமான இப்படத்தை ஜி ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் பென்ச் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. பூஜை, தாமிரபரணி போன்ற பல ஹிட் திரைப்படங்கள் விஷால் மற்றும் ஹரி இணைந்து கொடுத்திருந்ததால் இப்படமும் மிகப்பெரும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.