மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; இயக்குனர் நெல்சனின் மனைவி மீது திரும்பும் விசாரணை..!
கடந்த ஜூலை 5ம் தேதி, தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங், தனது வீட்டருகே மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், அரசியல்கட்சியை சேர்ந்த பிரமுகர்கள், ரௌடி கும்பல் என அடுத்தடுத்து 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரௌடி ஆற்காடு சுரேஷ் கொலை விவகாரத்தில், பழிக்கு பழிவாங்க எண்ணி காத்திருந்து ஆம்ஸ்ட்ராங்கின் கதையை தீர்த்துக்கட்டியது விசாரணையில் அம்பலமானது. சுரேஷின் சகோதரர் பாலா, அவரின் கூட்டாளிகள், அரசியல்கட்சிப்புள்ளிகள் அஞ்சலை, பொற்கொடி, மலர்க்கொடி, அஸ்வத்தாமன், வழக்கறிஞர்கள் இருவர் என கைது கூடிக்கொண்டு செல்கிறது.
நெல்சன் & மோனிஷாவிடம் விசாரணை:
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் தேடப்பட்டு வரும் ரௌடி மொட்டை கிருஷ்ணன் என்பவரிடம், இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா போனில் பலமுறை பேசி இருக்கிறார். இதனால் அவருக்கும் - ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்திற்கும் தொடர்பு உள்ளதா? என அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அவரைத்தொடர்ந்து நெல்சனிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வேறொரு வழக்கு தொடர்பாக ரௌடி மொட்டை கிருஷ்ணனிடம் தான் பேசியதாக மோனிஷா விளக்கம் அளித்துள்ளார் என கூறப்படும் நிலையில், ரௌடி மொட்டை தாய்லாந்து நாட்டுக்கு தனது குடும்பத்தோடு தப்பிசென்றுவிட்டார்.