மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மேடையில் அந்த வார்த்தையை கூறி அட்டகத்தி தினேஷை மிரட்டிய பா. ரஞ்சித்.. அதிர்ந்துபோன திரைத்துறையினர்.?
கோலிவுட் திரையுலகில் பிரபல இயக்குனராக இருப்பவர் பா ரஞ்சித். இவர் 'அட்டகத்தி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு கபாலி, காலா, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
சமீபத்தில் இவர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' திரைப்படம் திரையில் வெளிவரவிருக்கிறது. சமூகப் கருத்துக்களை உடைய படங்களை இயக்குவதில் முக்கியத்துவம் கொடுத்து வருபவர் பா ரஞ்சித்.
இவரது இயக்கத்திற்காகவே தனி ரசிகர் கூட்டங்கள் இருக்கும் நிலையில், இப்போது அட்டகத்தி 2 திரைப்படம் பா ரஞ்சித் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்படி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டனர் பா. ரஞ்சித் மற்றும் அட்டகத்தி தினேஷ்.
இந்த பேட்டியில் அட்டகத்தி உருவான விதத்தை குறித்து பா ரஞ்சித் கூறியிருக்கிறார். மேலும் அட்டகத்தி இரண்டாம் பாகம் இயக்குவதை குறித்து தினேஷிடம் கேட்டேன். ஆனால் அவர் என்னால் முடியாது என்று மறுத்துவிட்டார் என்று ரஞ்சித் கூறவே, தினேஷ் இதனை மறுத்து நான் அப்படியெல்லாம் சொல்லவே இல்ல சார் என்று கூறினார். இதற்கு வேடிக்கையாக பா ரஞ்சித் "டேய் சாவடிச்சிடுவேன்" என்று கூறினார் இந்த வீடியோ பார்த்து பலரும் என்னதான் இருந்தாலும் அவரும் ஒரு நடிகர் தானே இப்படி மரியாதை இல்லாமல் பேசலாமா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.