மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு நடிகராக இயக்குனர் சங்கர் நடித்த வீடியோ காட்சி!! யாரும் அதிகம் பார்த்திராத வைரல் வீடியோ இதோ!!
இயங்குனர் சங்கர் இன்று தனது 58 வது பிறந்தநாளை கொண்டாடும்நிலையில் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
இந்திய அளவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் சங்கர். படம் இயங்குவதையும் தாண்டி, எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் சங்கர் நடத்தி வருகிறார். இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்கள் என மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று பெரியளவில் வெற்றிபெறுகிறது.
குறிப்பாக ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், எந்திரன் போன்ற படங்கள் இவரது திறமைக்கு ஒரு பெரிய உதாரணம். இன்று இந்தியளவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் சங்கர், திரைப்பட இயக்குநர் ஆவதற்கு முன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.
சங்கர் இன்று தனது 58 வது பிறந்தநாளை கொண்டடும்நிலையில், ரசிகர்கள் அவரது பழைய புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கிவருகின்றனர். அந்தவகையில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சீதா என்ற படத்தில் சங்கர் சிறு வேடத்தில் நடித்துள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.