மாநாடு படத்தில் வில்லனுக்கு தனுஷ்கோடி என பெயர் வைத்தது ஏன்? இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்ட சுவாரசிய தகவல்!



Director venkat prabhu explain about name to thanushkodi for villain

வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி கடந்த 25ஆம் தேதி ரிலீசான திரைப்படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக, ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வில்லனாக எஸ்.ஜே சூர்யா ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மாநாடு திரைப்படம் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாநாடு படக்குழுவினர் ஒன்றாக சேர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தனர்.

Thanushkodi

இப்படத்தில் சிம்புவுக்கு அப்துல் காலிக் எனவும், வில்லனாக நடித்த எஸ்.ஜே சூர்யாவிற்கு தனுஷ்கோடி எனவும் பெயர் வைக்கப்பட்டது. இந்நிலையில் தனுஷ்கோடி என பெயர் வைத்தது குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார். அதில் அவர், பவர்ஃபுல்லான ஒரு பெயர் வேண்டும் என நினைத்தோம். ரஜினி – கமல், அஜித் – விஜய் வரிசையில் சிம்பு என்றதும் முதலில் நினைவுக்கு வருவது தனுஷ்தான். அந்தப் பெயர் வைத்தாலே பவர் வந்துவிடும் என யோசித்தோம். அவர்கள் இருவருமே நண்பர்கள்தான். இதற்காக கண்டிப்பாக தனுஷே போன் செய்து சந்தோஷப்படுவார் என்று கூறியுள்ளார்.