மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இனி வெங்கட் பிரபு படத்தில் நடிக்க மாட்டேன்.. மங்காத்தா திரைப்படத்தால் கோபமடைந்த அஜித்.?
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் வெங்கட் பிரபு. இவர் 'சென்னை 28' படத்தின் மூலம் இயக்குனராக தமிழில் அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் பிறகு சரோஜா, கோவா போன்ற திரைப்படங்களை இயக்கி இருந்தார்.
இப்படங்களை தொடர்ந்து வெற்றி படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்ததால் முன்னணி நடிகரான அஜித் கதாநாயகனாக நடித்த 'மங்காத்தா' திரைப்படத்தை இயக்கினார் வெங்கட் பிரபு. இப்படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்து அஜித் ரசிகர்களுக்கு விருந்தை அளித்தது.
'மங்காத்தா' திரைப்படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கிய படங்கள் பெரிதளவு வெற்றி பெறவில்லை. இதனால் சிம்புவை வைத்து 'மாநாடு' திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மீண்டும் தனது பெயரை நிலை நாட்டினார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான 'கஷ்டடி' திரைப்படம் எதிர்பார்த்து அளவிற்கு வெற்றியை தரவில்லை.
இதுபோன்ற நிலையில், 'மங்காத்தா 2' திரைப்படத்தின் பேச்சு ஆரம்பமானது. ஆனால் இப்படத்தில் நடிக்க அஜித்துக்கு விருப்பமில்லை என்பதால் அடுத்தடுத்த வேறு இயக்குனர்களுடன் கமிட்டாகினார். இருந்தபோதிலும் தொடர்ந்து வெங்கட் பிரபு பல நிகழ்வுகளில் 'மங்காத்தா' படத்தை குறித்து பேசி வந்ததால் அஜித் மிகுந்த கோபமடைந்து இனிமேல் வெங்கட பிரபுவுடன் எந்த திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார். இச்செய்தி பத்திரிக்கையாளர் அந்தணன் பிரபல யூ ட்யுப் சேனலில் பேட்டி அளித்துள்ளார்.