மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கதாநாயகியின் ஆடையைத் துவைத்த இயக்குனர்.! அதனை போட்டோ எடுத்து அவரது மனைவிக்கு அனுப்பிய உதவி இயக்குனர்.! அடுத்து என்னாச்சு.?
போத்தனூர் தபால் நிலையம் என்ற படம் மே மாதக் கடைசியில் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி விமர்சனரீதியாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இப்படத்தை எழுதி, இயக்கி, நடித்துள்ளவர் பிரவீன். இப்படம் 1990 களில் உள்ள கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக அஞ்சலி ராவ் நடித்திருந்தார். இப்படத்திற்காக இயக்கம் மட்டுமல்லாமல் பல வேலைகளையும் பார்த்ததாக பிரவீண் கடந்த சில நாட்களாகவே பல பதிவுகளை சம்பந்தப்பட்ட புகைப்படங்களுடன் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் ஒரு பதிவில் படத்தின் கதாநாயகியின் ஆடைகளை அவரே துவைத்ததாக பதிவிட்டுள்ளார்.
அனைத்து முக்கிய கதாபாத்திரங்களின் ஆடைகள் என்னால் மட்டுமே துவைக்கப்பட்டன. வாஷிங் மெஷின் பயன்படுத்தப்படவில்லை. ஏனென்றால் எங்களிடம் ஒரே ஒரு செட் மட்டுமே இருந்தது, அதை சில வருடங்களாக மெயின்டைன் செய்தாக வேண்டும். நான் கதாநாயகியின் ஆடையைத் துவைத்த போது எனது உதவி இயக்குனர் இந்த புகைப்படத்தை எடுத்து எனது மனைவிக்கு அனுப்பிவிட்டார். அடுத்து என்ன நடந்திருக்கும், யூகியுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.