மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல நடிகரான ராஜேஷின் முதல் திரைப்படத்தின் பெயர் என்ன தெரியுமா.?
பிரபல நடிகரான ராஜேஷ் தமிழ் மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து அதன் மூலமாக பிரபலமானவர். மேலும் அவர் பல்வேறு மொழிகளில் 47 ஆண்டுகளாக 150-க்கும் அதிகமான திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்கள் மற்றும் துணை கதாபாத்திரம் ஆகியவற்றில் நடித்திருக்கிறார். முதலில் கதாநாயகனாக தொடங்கி, அதன் பிறகு குணச்சித்திர வேடங்கள் வரையில் அனைத்து கதாபாத்திரத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் தான் நடிகர் ராஜேஷ்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் 1949-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20-ஆம் தேதி பிறந்த ராஜேஷின் குடும்பம் தஞ்சை மாவட்டத்திலுள்ள ஆணைக்காடு பகுதியை பூர்வீகமாக கொண்டது. தேனி மாவட்டம் சின்னமனூர், தஞ்சை மாவட்டத்திலுள்ள ஆனைக்காடு, திண்டுக்கல் மாவட்டம் மேலநத்தம், வடமதுரை போன்ற பகுதிகளில் இவர் படித்திருக்கிறார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பியூசி படித்து அதன் பிறகு பச்சையப்பா கல்லூரியில் சேர்ந்த இவர், துரதிஷ்டவசமாக தன்னுடைய கல்லூரி படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. முதலில் ஜெயின்ட் பால்ஸ் உயர்நிலைப் பள்ளியிலும், அதன் பின்னர் கடந்த 1972-ஆம் ஆண்டு முதல் 1979-ஆம் ஆண்டு வரையில் சென்னை திருவல்லிக்கேணியில் இருக்கின்ற கெல்லட் மேல்நிலை பள்ளியிலும் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் தான் கடந்த 1974-ஆம் ஆண்டு அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டும் தான் அவர் நடித்திருந்தார். அதன் பின்னர் கடந்த 1979-ஆம் ஆண்டு ராஜ் கண்ணு தயாரித்த கன்னி பருவத்திலே திரைப்படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமானார் ராஜேஷ். அதன் பிறகு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் அச்சமில்லை, அச்சமில்லை என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். அதன் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார். அதோடு நடிகர் கமல்ஹாசனுடன் விருமாண்டி, மகாநதி, சத்யா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில்தான் அவர் தற்போது ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் ஹோட்டல் நிர்வாகம் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார். ஜோதிடம் பற்றி பல்வேறு நூல்களையும், கட்டுரைகளையும் இவர் எழுதியிருப்பதோடு, ஹாலிவுட் நடிகர்களின் வாழ்க்கை வரலாற்றையும் தமிழ் மொழியில் எழுதியிருக்கிறார் நடிகர் ராஜேஷ்.
கடந்த 1985-ஆம் வருடம் சென்னை கேகே நகர் அருகில் சினிமா படப்பிடிப்புக்காக பங்காளக் கட்டிய முதல் நடிகர் இவர்தான் என்று கூறப்படுகிறது. அந்த பங்களாவை அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் திறந்து வைத்திருக்கிறார். அந்த பங்களாவில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் படப்பிடிப்பு இதுவரையில் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது.