மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
2023-ஆம் ஆண்டு வெளியான மினி பட்ஜெட் படங்களில் அதிக பிரபலங்களால் பாராட்டப்பட்ட திரைப்படத்தின் பெயர் என்ன தெரியுமா.?
2023-ஆம் வருடம் மினி பட்ஜெட்டில் உருவான ஒரு சில திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. அந்த திரைப்படங்களின் பட்டியலில் முன்னணி இயக்குனர்களால் அதிகளவில் பாராட்டப்பட்ட திரைப்படங்களின் பட்டியலை தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் பல்வேறு முன்னணி இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தது என்று சொல்லலாம். கணேஷ் கே பாபு அவர்களால் இயக்கப்பட்ட இந்த திரைப்படத்தை தனுஷ், கமல்ஹாசன், ஜெயம் ராஜா, வெற்றிமாறன், அமீர் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.
விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் வெளியான குட்நைட் திரைப்படத்திற்கு பல முன்னணி இயக்குனர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த திரைப்படத்தில் மணிகண்டனுடன் இணைந்து மீதா ரமேஷ், திலக் ரகுநாத், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. லோகேஷ் கனகராஜ், மிஷ்கின், வெற்றிமாறன் உள்ளிட்ட பல இயக்குனர்கள் இந்த திரைப்படத்தை வெகுவாக பாராட்டியிருந்தனர்.
அதேபோன்று சசிகுமார் நடிப்பில் வெளிவந்த அயோத்தி திரைப்படத்திற்கும் பல முன்னணி இயக்குனர்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர். சசிகுமாருடன் இணைந்து குக் வித் கோமாளி புகழ் ,ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படத்தை மந்திரமூர்த்தி இயக்கியிருந்தார்.
அடுத்தபடியாக சரத்குமார், அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்திருந்த போர் தொழில் என்ற திரைப்படமும் முன்னணி இயக்குனர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. மினி பட்ஜெட்டில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் பீல் குட் மூவியாக காணப்பட்டனர். ஆனாலும், போர் தொழில் திரைப்படம் மட்டும் ஒரு வித்தியாசமான முறையில் இருந்தது. இந்த திரைப்படத்தை மிஷ்கின், நிதிலன், ஜெயம் ராஜா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் பாராட்டியிருந்தனர்.
சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா திரைப்படம் பரவலான வரவேற்பை பெற்றிருந்தது. சித்தார்த், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படத்தை அருண்குமார் என்பவர் இயக்கியிருந்தார். குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவுகள், குட் டச், பேட் டச் தொடர்பாக உருவாகியிருந்த இந்த திரைப்படத்திற்கு பல முன்னணி இயக்குனர்கள் வாழ்த்து கூறியிருந்தனர். ஆனாலும் கூட கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் தான் அதிக வாக்குகள் பெற்று முன்னணியிலுள்ளது.