மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீர் நெஞ்சுவலி! உயிருக்கு போராடிய கடைசி நிமிடத்திலும் பயணிகளை காப்பாற்ற ஓட்டுநர் செய்த காரியம்!!
புதுக்கோட்டை மாவட்டம் இழுப்பூர் அடுத்த பூனைக்குத்திபட்டியை சேர்ந்தவர் ஆனந்த். இவர் திருச்சியில் இருந்து அன்னவாசலுக்கு செல்லும் தனியார் பேருந்தில் ஒட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் திருச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து
திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில், விராலிமலை அருகே பாத்திமா நகர் பகுதியில்
சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் ஆனந்துக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
இதில் சற்று நிலைதடுமாறிய ஆனந்த் எப்படியாவது பயணிகளை காப்பாற்ற வேண்டுமென சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை சாலையை கடந்து நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த காலி நிலத்தில் நிறுத்தியுள்ளார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் மயக்கமடைந்த ஆனந்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஆனந்த் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தான் உயிரிழக்கும் நிலையிலும் பல உயிர்களை காப்பாற்றிய ஓட்டுநர் ஆனந்தின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.