கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
போதையில் தந்தைக்கு அடி... தடுக்க வந்த அண்ணன் படுகொலை.!! குடிகார தம்பி கைது.!!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மது போதையில் தகராறு செய்த தம்பி, சொந்த அண்ணனை குத்தி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தையை தாக்கிய போதை மகன்
மதுராந்தகம் அருகே உள்ள குமாரவாடி பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவருக்கு செல்வம் மற்றும் நாகராஜ் என 2 மகன்கள் இருந்தனர். இவரது இளைய மகனான நாகராஜ் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது. தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டிலும், அக்கம் பக்கத்திலும் தகராறு செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்றிரவு மது போதையில் வீட்டிற்கு வந்த நாகராஜ் அவரது தந்தை நீலகண்டனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தந்தையை அடிக்க சென்றதாக தெரிகிறது.
சொந்த அண்ணன் குத்தி கொலை
இந்நிலையில் தம்பி தனது தந்தையை அடிப்பதை கண்ட செல்வம் அதனை தடுக்க முயன்றார். அப்போது அவருக்கும் நாகராஜுக்குமிடயே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜ் கத்தியை எடுத்து தனது அண்ணனை குத்தினார். இந்த தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த செல்வத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் செல்வம் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: போதையில் ஓரின சேர்க்கை... அரசு பணியாளரிடம் பணம் பறிப்பு.!! கல்லூரி மாணவர்கள் கைது.!!
காவல்துறை நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்த செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அண்ணனை கொலை செய்த நாகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பியே தனது அண்ணனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: "நம்ம புள்ளய கொன்னவன் கூட கள்ள தொடர்பு கேக்குதோ..." காதலனுக்கு அரிவாள் வெட்டு.!! அண்ணன், கணவன் கைது.!!