மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Eagle Trailer: ஆக்சன் காட்சிகளில் தெறிக்கவிட்ட ரவி தேஜா: ஈகிள் பட ட்ரைலர் இதோ.. தெலுங்கு சினிமா ரசிகர்கள் கொண்டாட்டம்.!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் ரவி தேஜா, நடிகர்கள் அனுபமா பரமேஸ்வரன், காவ்யா தாபர், நவ்தீப், ஸ்ரீனிவாஸ் அவசராலா, மதுபாலா & அஜய் கோஷ் உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ஈகிள்.
கார்த்திக் கட்டம்நேனி எழுத்து, இயக்கம், தொகுப்பில் உருவாகியுள்ள ஈகிள் திரைப்படம், ஜனவரி 13ம் தேதியன்று உலகளவில் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகிறது.
தாவ்சந்த் இசையில், மென்டெம் சதீஷ், கோர்லபதி பாபிராஜு, கோர வீரேந்திர பாபு, கவுதம் சிலமகுருதி, ஹர்ஷா ஜம்பாலா, வினய் அனந்து, அபிலாஷ் எம் ஆகியோரின் ஒளிப்பதிவில் அட்டகாசமாக படம் உருவாகியுள்ளது.
இன்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு விழா நடைபெற்ற நிலையில், ரவி தேஜாவின் அட்டகாசமான ஆக்சன் காட்சிகளில் உருவாகியுள்ள படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.