மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ.. பிரபல நடிகரின் தாயாருக்கு திடீர் மாரடைப்பு.. மருத்துமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி..!!
பிரபல நடிகரின் தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அமீர்கான். இவர் நடித்த பல படங்களும் இணையத்தில் வைரலாகிய நிலையில், சமீபத்தில் காபி வித் கரன் என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பல சுவாரசியமான கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
இந்த நிலையில், இவரது தாயார் ஜீனித் ஹுசைன் உடல்நிலைகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீபாவளி பண்டிகையின் போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்படவே, உடனடியாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து தற்போது அவர் தீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ள காரணத்தால், விரைவில் குணமடைய வேண்டும் என்ற ரசிகர்களும் கூறிவருகின்றனர்.