மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
750 படங்களுக்கு மேல் நடித்துள்ள பழம்பெரும் நடிகர் காலமானார்.! சோகத்தில் திரையுலகினர்.!
பழம்பெரும் தெலுங்கு நடிகர் கைகலா சத்தியநாராயணா இன்று காலமானார். 86 வயதான கைகலா சத்ய நாராயணாவுக்கு சில மாதங்களுக்கு முன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் கைகலா சத்ய நாராயணாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனல் சிகிச்சை பலனின்றி இன்று காலை நடிகர் கைகலா சத்தியநாராயணா காலமானார். 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் பஞ்சதந்திரம், பெரியார் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் வில்லன், குணச்சித்திரக் கலைஞர் மற்றும் நகைச்சுவை வேடங்களில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவரது உடல் நாளை இறுதிச்சடங்கு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கைகாலா சத்தியநாராயணாவிற்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள்கள் உள்ளனர். இவரது மறைவு தெலுங்கு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கைகலா சத்தியநாராயணா மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.