அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
யோகி பாபுவிற்கு அம்மாவாகும் பிரபல முன்னணி நடிகை.! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் 1990ல் பல பிரபல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரேகா. தமிழ் மட்டுமின்றி மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் நடிகர் சத்யராஜ் உடன் இணைந்து கடலோர கவிதைகள் படத்தில் டீச்சராக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். இவ்வாறு பல வெற்றி படங்களில் நடித்த ரேகா திருமணத்திற்கு பிறகு குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ரேகா எமன் மற்றும் எமலோகத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தர்மப்பிரபு படத்தில் நாயகனாக நடிக்கும் காமெடி நடிகர் யோகி பாபுவிற்கு அம்மாவாக நடிக்கிறார்.
அவர்களுடன் மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், மாஸ்டர் கணேஷ் ஜனனி அய்யர் ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்