பிரபல நடிகர் உடல்நலக்குறைவால் திடீர் மரணம்; கண்ணீரில் ரசிகர்கள்.. சோகத்தில் திரையுலகம்.!



famous bollywood actor jitendra shastri dead

மிர்சாபூர் தொடரில் உஸ்மானாக நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகர் மரணமடைந்தார்.

பிரபல இந்தி நடிகரான ஜிஜேந்திரா சாஸ்திரி (வயது 65). இவர் ஹிந்தி திரையுலகில் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். பிளாக் பிரைடே, இந்தியாஸ் மோசட் வான்டட், ராஜ்மா சாவ்லா உட்பட பல படங்களில் அவர் நடித்துள்ளார். 

ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற மிர்சாபூர் தொடரில் உஸ்மான் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இவருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்தது. 

Bollywood actor

இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நன்மையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவு திரைஉலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.