மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜயகாந்தின் வெற்றி பட இயக்குனர்.. தெருவோரமாக இறந்து கிடந்த சோகம்.! ஆடிப்போன சினிமாத்துறை.!
பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் எம்.தியாகராஜன் ஏ.வி.எம் ஸ்டுடியோ எதிரில் தெருவோரமாக அனாதையாக இறந்து கிடந்துள்ள சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை இயகியவர் இயக்குனர் எம்.தியாகராஜன். இவர் நடிகர் பிரபு நடித்த வெற்றி மேல் வெற்றி, ஏவி.எம். தயாரிப்பு நிறுவனத்தின் 150வது படமான நடிகர் விஜயகாந்த் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற மாநகர காவல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
அருப்புக்கோட்டையை சேர்ந்த இயக்குனர் எம். தியாகராஜன், வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். சினிமா இயக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் டி.எஃப்.டி படித்து சினிமா இயக்குனரானார். வெற்றி மேல் வெற்றி, மாநகரக் காவல் ஆகிய வெற்றிப் படங்களையும் இயக்கினார்.
பின்னர், அவருக்கு அவரது சொந்த ஊர் அருகே விபத்தில் அடிபட்டு கோமா நிலைக்கு சென்றார். கோமாவிலிருந்து பிழைத்து மீண்டும் கோடம்பாக்கத்திற்கு சினிமாவை நோக்கி வந்தார். வடபழனியில் அழுக்கான உடையோடு கையில் செய்தித்தாளோடும் அம்மா உணவத்தின் ஆதரவிலும் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், இயகுனர் எம். தியாகராஜன் ஏவிஎம் ஸ்டுடியோ எதிரிலேயே இன்று புதன்கிழமை அதிகாலை தெருவோரமாக அனாதையாக இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுரி மருத்துவமனைக்கு அவரது உடலை எடுத்துச் சென்றனர்.