மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்பி எடுப்பது போல நடித்து பிரபல நடிகை கடத்தல்.. பரபரப்பு வீடியோ வைரல்.!
கன்னட திரையுலகில் பிரபல தொலைக்காட்சி நடிகையாக இருந்து வருபவர் கவிதா கவுடா. இவர் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் பிஸியான நபராக இருந்து வரும் நிலையில், அவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் புடைசூழ்ந்து புகைப்படம் எடுக்க ஆர்வப்பட்டு ஆரவாரம் செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், நடிகை கவிதா கவுடா சாலையோரம் நின்று பேசிக்கொண்டு இருக்கையில், அங்கு வந்த ரசிகர் அவருடன் புகைப்படம் எடுக்கிறார். பின்னர், காரில் வந்த நபர்கள் செல்பி எடுக்க வேண்டும் என்று கூறவே, கவிதா செல்பி எடுக்க முயற்சிக்கையில், அவர் காரில் கடத்தி செல்லப்படுகிறார்.
இந்த வீடியோ இணையத்தளத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அது கோவிந்தா கோவிந்தா திரைப்படத்தின் படமாக்களின் போது சி.சி.டி.வி காமிராவால் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் எனவும், ரசிகர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.