மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல பழம்பெரும் நடிகை மூளை ரத்தக்கசிவால் மருத்துவமனையில் அனுமதி: உடல்நிலை கவலைக்கிடம்.!
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாகவும், பழம்பெரும் நடிகையாகவும் இருந்து வருபவர் ஹேமா சவுத்ரி. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் வெளியான 180 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கடந்த நான்கு தசாப்தங்களாக திரைத்துறையில் பணியாற்றி வரும் ஹேமா சவுத்ரி பெங்களூருவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதை அடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அவை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரின் உடல்நலம் மோசமாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.