மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல தமிழ் பட வில்லனுக்கு இந்த நிலைமையா.. விஷத்தை கசாயத்தில் கலந்த நபர்.?
தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லனாக அறியப்படுபவர் ஜே.டி சக்கரவர்த்தி. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். முதன் முதலில் 'சிவா' எனும் திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரும் வெற்றியை பெற்றது.
இப்படத்திற்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்து தொடர் வெற்றி திரைப்படங்களை தமிழ், தெலுங்கு, ஹிந்தி சினிமா ரசிகர்களுக்கு அளித்து வருகிறார் ஜே.டி சக்கரவர்த்தி. இவரது நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார்.
மேலும் ஜே.டி சக்கரவர்த்தி தமிழில் 'கச்சேரி ஆரம்பம்' திரைப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். இதன்பின் சர்வம், அரிமா நம்பி, சமர், பூஜ்யம், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, காரி போன்ற திரில்லர் திரைப்படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார்.
இது போன்ற நிலையில், நடிகர் ஜே.டி சக்கரவர்த்திக்கு அடிக்கடி மூச்சு திணறல் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. பல மருத்துவர்களிடம் சென்றும் பலன் இல்லை. இதனையடுத்து ஒரு பிரபல மருத்துவர் இவரின் ரத்தத்தை பரிசோதித்து விட்டு இவருக்கு ஸ்லோ பாய்சன் ரத்தத்தில் கலந்து இருக்கிறது என்று கண்டுபிடித்து இருக்கிறார். இச்செய்தி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஸ்லோ பாய்சனை இவரது நெருங்கிய உறவினர் தான் உணவில் கலந்து இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.