மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிம்புவின் மாநாடு டீசரை கண்டு நெட்டிசன்கள் செய்த காரியம்! இயக்குனர் வெங்கட்பிரபு கூறியுள்ளதை பார்த்தீர்களா!!
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் மாநாடு திரைப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து வெளியான படத்தின் மோஷன் போஸ்டருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், மாநாடு படத்தின் டீசர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 3-ஆம் தேதி வெளியானது. அதனைக் கண்ட ரசிகர்கள் மாநாடு படத்தை பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய டெனெட் படத்துடன் ஒப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில்,மாநாடு படத்தின் டீசரை மக்கள் டெனெட் படத்தோடு ஒப்பிடுவதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது. ஆனால் மாநாடு படத்திற்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை. உண்மையிலேயே எனக்கு டெனெட் படம் புரியவில்லை. மாநாடு டிரெய்லருக்காக காத்திருங்கள். அதைப் பார்த்த பின் நீங்கள் வேறு ஏதேனும் ஒரு படத்தோடு ஒப்பிடலாம் என குறிப்பிட்டுள்ளார்.