கோழி அறுப்பது போல் தனது மகளின் கழுத்தை கொடூரமாக அறுத்துக் கொன்ற தந்தை.! இதுதான் காரணமா?? அதிர்ச்சி சம்பவம்!!
பெங்களூர் புறநகர் தேவனஹள்ளி தாலுக்கா பிதலூர் கிராமத்தில் வசித்து வருபவர் 45 வயது நிறைந்த மஞ்சுநாத். இவர் கோழி இறைச்சி விற்பனை செய்து வருகிறார். இவருக்கு இரு மகள்கள். மூத்த மகள் 20 வயது நிறைந்த கவனா. அவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மஞ்சுநாத்தின் இரண்டாவது மகள் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
இதுகுறித்து அவரது தந்தை கண்டித்த நிலையிலும் அதைக் கேட்காமல் அவர் காதலனுடன் கடந்த 10ம் தேதி மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இந்நிலையில் அந்த இளம்பெண்ணுக்கு 17 வயதே ஆவதால் அவரை போலீசார் மகளிர் பாதுகாப்பு காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் கவனா தான் வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை காதலிப்பதாக தனது தந்தையிடம் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மஞ்சுநாத் காதலை கைவிடுமாறு மகளை கண்டித்துள்ளார். ஆனால் அதனை அவர் கேட்காத நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மஞ்சுநாத் தன் மகளை கடுமையாக திட்டி, இரும்பு கம்பியால் அவரது தலையில் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த கவனா மயங்கி விழுந்துள்ளார்.
அப்பொழுது அவர் கோழி அறுப்பதற்காக வைத்திருந்த கத்தியால் தனது மகளின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் கவனா ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து உயிரிழந்தார்.அதனைத் தொடர்ந்து மஞ்சுநாத் வேறு சமூக இளைஞரை காதலித்ததால் தனது மகளை கொன்றதாக கூறி போலீசில் சரணடைந்துள்ளார். பிறகு போலீசார் அவரது வீட்டிற்கு விரைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த கவனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.