மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்றாயனுக்கு கிடைத்த முதல்விருது!! யார் கொடுத்தது?எந்த படத்திற்கு தெரியுமா??
தமிழ் சினிமாவில் காமெடி, குணசித்திர, வில்லன் வேடம் என பல படங்களில் நடித்திருந்தவர் சென்றாயன். நடிகர் தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சென்ட்ராயன். பொல்லாதவன் படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து செண்ட்ராயனும் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
இதனை தொடர்ந்து அவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 பங்கேற்றதன் மூலம் பெருமளவில் பிரபலமானார். மேலும் எதார்த்தமான பேச்சிற்கும், வெளிப்படையான நடவடிக்கைகளுக்கும் பெரும் ரசிகர் பட்டாளமே உருவானது.
கடந்த வாரத்திற்கு முன்பு தான் செண்ட்ராயனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில், அவர் பேசுகையில் எனக்கு முதன் முதலாக 2013 ல் நான் நடித்த மூடர்கூடம் படத்திற்கு, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை ஆனந்தவிகடன் கொடுத்தார்கள். அது தான் நான் பெற்ற முதல் விருது என மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.