மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிச்சைக்காரன் பட ஹீரோ முதலில் இவர் தானாம்.! இப்ப வருத்தப்பட்டு என்ன பயன்.?!
பிரபல இயக்குனரான சசிகுமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் வருடம் வெளியான திரைப்படம் தான் பிச்சைக்காரன். இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் தீபா ராமானுஜம், பகவதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படம் இன்றளவும் மக்கள் மனதிலிருந்து நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள அம்மா பாடல் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த திரைப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், இந்த திரைப்படத்தின் 2ம் பாகம் இந்த வருடம் வெளியாகியிருந்தது. இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு முன்பாக நடிக்கவிருந்தது நடிகர் சித்தார்த் தான் என்று தெரியவந்துள்ளது. இந்த கதையை தெரிவித்தபோது நடிக்க அவர் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் சித்தார்த்திடம் தெரிவித்த கதை வேறு, அதன் பிறகு படமாக்கப்பட்ட கதை வேறு என்று கூறப்படுகிறது.
சித்தார்த்திடம் தெரிவித்த கதையை தவிர்த்து சில மாற்றங்களை கொண்டு வந்து அந்த கதையை விஜய் ஆண்டனியிடம் தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனியும் இந்த கதைக்கு உடனே ஓ.கே சொன்ன நிலையில், அந்த திரைப்படத்தில் அவர் நடித்தார்.
அதன்பின் இந்த திரைப்படத்தை பார்த்த சித்தார்த் இந்த படத்தை நான் மிஸ் பண்ணிட்டேன் என்று வருத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதற்கு பதிலாகத்தான் சசி இயக்கத்தில் அடுத்தபடியாக வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை என்ற திரைப்படத்தில் சித்தார்த் நடித்திருந்தார் என்று சொல்லப்படுகிறது.