மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்படி மிஸ் பண்ணிட்டாரே... காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது இவரா...? வெளியான தகவல்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் ஏப்ரல் 28ஆம் தேதி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். மேலும் இதில் தென்னிந்திய சினிமாவிலேயே டாப் ஹீரோயின்களாக கொடிகட்டி பறக்கும் நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்துள்ளனர்.
இப்படத்தை லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் முதல் முதலில் விஜய் சேதுபதி நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிப்பதாக இருந்ததாம். மேலும் நயன்தாரா, சிவகார்த்திகேயன், திரிஷா இந்த மூவரை வைத்து தான் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உருவாகியுள்ளதாம். ஆனால், அப்போது சில காரணங்களால் நடிகர் சிவகார்த்திகேயனால் இப்படத்தில் நடிக்கமுடியாமல் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.