மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. சூப்பர் ஹிட்டான கில்லி திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த மாஸ் பிரபலங்களா.! இப்படி மிஸ் பண்ணிட்டாங்களே.!
தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் கில்லி. இதில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார் மேலும் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். இப்படம் ஒக்கடு என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்.
கில்லி திரைப்படத்தை தமிழில் இயக்குனர் தரணி இயக்கினார். இதில் விஜய் கபடி வீரராக நடித்திருப்பார். இப்படம் நடிகர் விஜய்யின் திரைவாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. மேலும் கில்லி திரைப்படம் பெரும் வசூல் சாதனையும் படைத்தது.
ஆனால் இயக்குனர் தரணி கில்லி திரைப்படத்தில் நடிக்க முதலில் அணுகியது நடிகர் விக்ரமையாம். மேலும் ஹீரோயினாக நடித்த ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் ஆனால் இருவரும் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் அவர்களால் கில்லி திரைப்படத்தில் நடிக்க முடியவில்லையாம். அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் ஒப்பந்தமாகி கில்லி படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்துள்ளார்.