மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா! சர்க்காருக்கு போட்டியாக தீபாவளிக்கு வெளியாகும் ஐந்து படங்கள்! எது எதுன்னு தெரியுமா?
முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில்தான் படங்கள் வெளியாகும். ஆனால் தற்போது வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை ஆனால் ஏதாவது ஒரு திரைப்படம் வெளிவந்துகொண்டுதான் இருக்கிறது. இருந்தாலும் பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் இன்றுவரை ஏதவது பண்டிகைநாள் பார்த்துதான் திரையிடுகிறார்கள்.
இந்நிலையில் இந்த வருட தீபாவளிக்கும் தல அஜித்தின் விஸ்வாசம், தளபதி விஜய்யின் சர்கார், சூர்யாவின் NGK ஆகிய படங்கள் ரிலீஸாக இருந்தன. ஆனால் விஸ்வாசமும், NGK வும் படப்பிடிப்புகள் முடிவடையாததால் தனியாக சர்கார் படம் மட்டுமே தனி ஒரு படமாக திரைக்கு வருவதாக இருந்தது.
ஆனால் சர்க்கார் படத்திற்கு போட்டியாக கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் வெளியாக இருதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் அஜீத் ரசிகராக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டி திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படங்களுடன் விஜய் ஆன்டனி நடித்துள்ள திமிரு பிடிச்சவன், சசிகுமாரின் நாடோடிகள் 2 படம் ஆகியவையும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் மொத்தம் 5 படங்கள் தீபாவளி ரேஸில் இடம் மோதிகொள்ள போகின்றன.